செய்திகள்

தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலி

தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மோதி சுமை தூக்கும் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

தஞ்சாவூர்:

தஞ்சை, பள்ளியக்ரகாரம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 50). சுமை தூக்கும் தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் வேலை முடித்து கொண்டு பள்ளியக்ரகாரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது தஞ்சை அருகே உள்ள கோடியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் இவரும் எதிர் பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.

இதுகுறித்து தஞ்சை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.