விபத்து காயம் 
செய்திகள்

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாணவி காயம்

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாணவி காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த கல்யாணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 37). இவரது மகள் மெட்டில் மெர்சி (12) . இவர் அருகே உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று மெட்டில்மெர்சி பள்ளி முடிந்து திருவையாறு அரியலூர் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மெட்டில் மெர்சி மீது மோதியது. தூக்கி வீசப்பட்ட மாணவி பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவையாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.