தமிழக செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் மழை

சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்புக்கு ஏற்ற மழையென விவசாயி கள்மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், திருவையாறு, பூதலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தத் திடீர் மழை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, சீர்காழி பகுதிகளில் மழை பெய்தது. நாகை மாவட்டம் வேதாரண்யம், காரியாபட்டினம், அகஸ்தியன்பள்ளி, பூப்பெட்டி, நெய்விளக்கு, தோப்புத்துறை, தேத்தாகுடி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகள்

மேலும் சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்புக்கு ஏற்ற மழையென விவசாயிகள்மகிழ்ச்சி தெரிவித்தனர். தொடர்ச்சியாக பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

SCROLL FOR NEXT