தமிழக செய்திகள்

மெஜாரிட்டியை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார்

த.வெ.க. தலைவர் விஜய் 4-வது முறையாக இன்று ஆளுநரை சந்தித்த நிலையில், நாளை பதவி ஏற்க அழைப்பு விடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று இரவு 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார். அப்போது நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க விஜய் நேரம் கேட்டார்

விஜய், இடதுசாரி தலைவர்கள், த.வெ.க. தலைவர்கள் ஆளுநர் அர்லேகரிடம் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்று வைக்க ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக நியமனம் செய்த ஆணையை விஜயிடம் ஆளுநர் அர்லேகர் வழங்கினார்.

விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும், அவருடன் சில அமைச்சர்களும் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.