தமிழக செய்திகள்

புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நிர்மல்குமார்

கைதிகளுக்கு உறவினர்கள் கொடுக்கும் பொருட்களை ஸ்கிரீனிங் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

புழல்:

சென்னை புழல் சிறை வளாகத்தில் கைதிகளுக்கான வசதிகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

* சமையல் கூடங்கள், மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.

* சிறைத்துறையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

* கைதிகளுக்கு உறவினர்கள் கொடுக்கும் பொருட்களை ஸ்கிரீனிங் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* கைதிகளுக்கான சட்ட உதவிகளை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

* மின்சாரத் துறையில் தேவையற்ற பணியிட மாற்றங்கள் கூடாது என உத்தரவிட்டுள்ளோம் என்றார்.