தமிழக செய்திகள்

புதிய சர்வே: தவெகவுக்கு 41% வாக்குகள் - 121 இடங்கள் கிடைக்க வாய்ப்பு - ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி தகவல்

காலம் காலமாக அதிமுக திமுகவுக்கு வாக்களித்தவர்கள் கூட இந்த முறை விஜய்க்கு வாக்களித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

1991 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான ரவி தாம்பரம் காவல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

நடப்பு சட்டமன்றத் தேர்தலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

2440 ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளின் உதவியுடன் 2.44 லட்சம் வாக்காளர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன் முடிவுகளை ஆய்வு செய்ததில் விஜய்யின் தவெகவுக்கு 41% வாக்குகள் கிடைக்கும் என்றும் மொத்தம் உள்ள இடங்களில் 121 இடங்களை தவெக கைப்பற்றும் என்றும் ரவி தெரிவித்துள்ளார்.

ஏன் விஜய்க்கு வாக்களித்தீர்கள் என கேட்டபோது தனது வீட்டில் பேரக் குழைந்தைகள், மகன்கள், மகள்கள் விஜய்க்கு தான் வாக்களிக்க வேண்டும் என வலியறுத்தியதால் வாக்களித்ததாக தெரிவித்தனர் என குறிப்பிட்ட ரவி காலம் காலமாக அதிமுக திமுகவுக்கு வாக்களித்தவர்கள் கூட இந்த முறை விஜய்க்கு வாக்களித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT