தமிழக செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்க முயன்ற விவசாயி பலி

பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வீரர்கள், கோபிமான் உடலை மீட்டு பொம்மிடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தை சேர்ந்த ஏசுதாஸ் மகன் கோபிமான் (45). விவசாயியான இவர், நேற்று ஆரோக்கியதாஸ் என்பவரின் விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஆடு ஒன்று கிணற்றின் பிடிவுப் பகுதியில் தவறி விழுந்தது.

விவசாயி பலி

அதனை மீட்க கோபிமான் கிணற்றில் இறங்கியபோது கால் தவறி உள்ளே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வீரர்கள், கோபிமான் உடலை மீட்டு பொம்மிடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT