தமிழக செய்திகள்

நெல்லை டவுன், பேட்டையில் நாளை மறுநாள் மின்தடை

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

நெல்லை நகர்ப்புற கோட்ட மின் செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின் நிலையம்

கொக்கிரகுளம், பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

மின்தடை

எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணார்பேட்டை, இளங்கோநகர், பரணி நகர், திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதி நகர், நெல்லை டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகர்,

பேட்டை

திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, கோட்டீஸ்வரன் நகர், சாஸ்திரி நகர், தீன் நகர், திருமங்கை நகர், செந்தமிழ் நகர், பாட்ட பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், டவுன் எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பன் துறை, டவுன் கீழ ரத வீதி, போஸ் மார்க்கெட், ஏ.பி.மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார் குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, நயினார் குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதியில் பகுதியில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.