தமிழக செய்திகள்

திருவண்ணாமலை கோவில் புதிய யானைக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும்- பக்தர்கள் வலியுறுத்தல்

கோவில் 5-ம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள யானைக்கான பராமரிப்பு மையத்தில், பாதுகாப்பாக யானை உள்ளது.

யானைக்கு, ஹீராலால் எனும் பெயரை தவிர்த்துவிட்டு, அழகிய தமிழ் பெயரை கோவில் நிர்வாகம் சூட்ட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு ஹீராலால் என பெயரிடப்பட்டுள்ள 8 வயது ஆண் யானைக்குட்டி கடந்த 24-ம் தேதி இரவு வந்து சேர்ந்தது.

அசாம் மாநிலம்

அசாம் மாநிலத்தில் இருந்து லாரி மூலம் கொண்டுவரப்பட்ட யானைக்கு, இரவு நேரத்திலும் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 3 ஆயிரம் கிமீ தூரம் லாரியில் பயணம் செய்து அழைத்து வரப்பட்டுள்ள யானைக்கு, சுமார் ஒரு மாதம் ஓய்வு அளிக்க வேண்டும். இங்குள்ள தட்பவெட்ப சூழ்நிலை அதற்கு பொருந்தும் வரை, கால்நடை பராமரிப்புத்துறையின் மேற்பார்வையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்

அதையொட்டி, கோவில் 5-ம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள யானைக்கான பராமரிப்பு மையத்தில், பாதுகாப்பாக யானை உள்ளது. தினமும் காலை உற்சாக குளியல், கரும்பு உள்ளிட்ட பிடித்தமான உணவுகள் வழங்கப்படுகின்றன. தினமும் மருத்துவ பரிசோதனையும் நடக்கிறது. நீண்ட காலத்துக்கு பிறகு வந்துள்ள, யானையை, அதற்கான பாகன்கள் ஆர்வமுடன் பராமரித்து வருகின்றனர். யானைக்கு, ஹீராலால் எனும் பெயரை தவிர்த்துவிட்டு, அழகிய தமிழ் பெயரை கோவில் நிர்வாகம் சூட்ட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT