அதிமுக முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் திமுகவில் இணைந்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பெஞ்சமின் திமுகவில் இணைந்தார்.
எஸ்.பி.வேலுமணி தரப்பை ஆதரித்ததால் பெஞ்சமினை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி நீக்கி இருந்தார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சா் பெஞ்சமின் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எதிா்வரும் காலங்களில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், உதயநிதியின் கட்டளையை ஏற்று கழகப்பணி மேற்கொள்வேன்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொண்டர்களை அரவணைத்துச் செல்லக்கூடிய அவரின் அன்பினால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்து கொண்டேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.