தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக ஆகியவற்றின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் விஜய் ஈடுபட்டு உள்ளார்.
அதே நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கலாமா என்கிற எண்ணமும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தவெகவிற்கு அதிமுக ஆதரவளிக்குமா? என அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,
தவெகவிற்கு ஆதரவளிப்பது தொடர்பாக கட்சி முடிவெடுக்கும். தவெகவிற்கு ஆதரவளிப்பது தொடர்பாக நான் எதுவும் கூற முடியாது என்று கூறினார்.