தமிழக செய்திகள்

தங்கும் விடுதியில் அறை எடுத்து பெண் தற்கொலை

கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை பெற்று வந்த வேண்டாமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது41), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு வேண்டாமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஷாலினி (10) என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் சதீஷூக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வேண்டாமணி சதீஷிடம் தட்டிக் கேட்டார். இதனால், கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

தற்கொலை

இதனால் மனவேதனை அடைந்த வேண்டாமணி நேற்று முன்தினம் இரவு ஷாலினியை அழைத்து கொண்டு தனது தந்தையிடம் திருப்பூர் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டைக்கு வந்த அவர் புது ஓட்டல் தெருவில் உள்ள தனியார் விடுதியில் மகளுடன் அறை எடுத்து தங்கினார். மேலும் தகராறை எண்ணி மனவேதனையில் இருந்த வேண்டாமணி நேற்று விடுதி அறையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் தனது மகளிடம் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார்.

போலீசார்

இதனால் கூச்சல் போட்ட சிறுமி தாயை காப்பாற்ற அருகில் இருந்தவர்களின் உதவியை நாடினார். அதன்பேரில் ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கபட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வேண்டாமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேண்டாமணியின் தந்தை ராஜாமணி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT