தமிழக செய்திகள்

சேலம்: பைக்கில் 12.5 கிலோ கஞ்சா கடத்திய தவெக பிரமுகர்? - 6 பேர் கைது

கஞ்சா பதுக்கி விற்கப்படுவதாக சங்ககிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சேலம் மாவட்டம் இடைப்பட்டியை அடுத்த அரசிராமணி பேரூராட்சியில் அரசிராமணி அடுத்த மூலப்பாதை பகுதியில் கஞ்சா பதுக்கி விற்கப்படுவதாக சங்ககிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று மூலப்பாதை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 12.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

விசரணையில், அவர்கள் ரசிராமணி செட்டிபட்டி சந்தை பகுதியை சேர்ந்த பூபதி ராஜா, அன்னதானப்பட்டியை சேர்ந்த நந்தபாலன் (23), இடைப்பாடி காந்தி நகர் தேவேந்திரன் (19), சேலம் செவ்வாய்பேட்டை பூபதி(25), காந்திநகர் லோகேஷ்(27) என அடையாளம் காணப்பட்டனர்.

பூபதி ராஜா அப்பகுதி தவெக நிர்வாகி என கூறப்படுகிறது.

அறுவரையும் கைது செய்த போலீசார் சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.