தமிழக செய்திகள்

சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணியிடம் ரூ.9¼ லட்சம் திருடிய வாலிபர் கைது

கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மேற்குதாம்பரம், கிருஷ்ணா நகரை சேர்ந்த கோபால்(31) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சர்கார் விரைவு ரெயிலில் கடந்தவாரம் காக்கிநாடாவில் இருந்து சென்னைக்கு அசோக் குமார் என்பவர் பயணம் செய்தார். அப்போது அவர் வைத்திருந்த கைப்பை திருடு போனது. அதில் ரூ.9 லட்சத்து 26 ஆயிரம் ரொக்கம், லேப்-டாப் இருந்தது.

போலீசார்

இதுகுறித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மேற்குதாம்பரம், கிருஷ்ணா நகரை சேர்ந்த கோபால்(31) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT