கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரண், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கோடம்பாக்கம், கங்காராம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். மெக்கானிக்கான இவர் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதி காமராஜர் காலனி பகுதியில் மழை காரணமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாலையோரமாக நின்றார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரவுடியான கரண் மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் ஆகிய இருவரும் விக்னேஸ்வரனிடம் மோட்டார் சைக்கிளை தரும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டனர். விக்னேஷ்வரன் மோட்டார் சைக்கிளை கொடுக்க மறுத்து கண்டித்தார். இதனால்ஆத்திரம் அடைந்த கரணும், மணிகண்டனும் சேர்ந்து விக்னேஸ்வரனை சரமாரியாக தாக்கினர். மேலும் மோட்டார் சைக்கிளையும் கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தி தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த விக்னேஸ்வரனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரண், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.