தமிழக செய்திகள்

கைதி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக கைதிகள் சிகிச்சை பிரிவு முன்பு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று மதியம் சங்கரலிங்கம் அங்குள்ள குளியல் அறையில் தனது லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நெல்லை அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளம் அம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரின் மகன் சங்கரலிங்கம் (வயது 27). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி பவித்ரா என்ற மனைவி உள்ளார்.

தற்கொலை

சங்கரலிங்கம் மீது 4 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் ரவுடி பட்டியலில் வைத்து கண்காணித்து வந்தனர்.

கடந்த 10-ந் தேதி கஞ்சா விற்பனை செய்ததாக சங்கரலிங்கத்தின் மீது முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று மதியம் சங்கரலிங்கம் அங்குள்ள குளியல் அறையில் தனது லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசார் கைதி சாவு குறித்து வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அவரது உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அரசு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர்.

இதனால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக கைதிகள் சிகிச்சை பிரிவு முன்பு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

SCROLL FOR NEXT