பயணிகள் இன்று சிரமமின்றி தங்களின் உடமைகளுடன் மாநகர பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.
ஆயுத பூஜை விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற பொது மக்கள் இன்று காலையில் சென்னைக்கு திரும்பினார்கள். இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் ஏறி பயணிகள் சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு வந்தனர்.
இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இன்று காலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு எளிதாக செல்லும் வகையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இன்று மாநகர பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன.
பயணிகள் தங்கள் உடமைகளை சுமந்தபடி கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் நீண்டதூரம் நடந்து சென்று பஸ் ஏறுவதை தவிர்ப்பதற்காக இன்று பல மாநகர பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் நுழைவு வாயில் பகுதிக்கு அருகில் இருந்தே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் இன்று சிரமமின்றி தங்களின் உடமைகளுடன் மாநகர பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.