தமிழக செய்திகள்

ஊட்டி அருகே மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த வைக்கோல் லோடு லாரி

வைக்கோல் பாரம் ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி–எமரால்டு சாலையில் வைக்கோல் பாரம் ஏற்றிய ஒரு லாரி நேற்று சென்று கொண்டு இருந்தது. அப்போது மஞ்சனக்கொரை பகுதி அருகே வாகனம் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

லாரி கவிழ்ந்து விபத்து

இந்த விபத்தில் மின்கம்பம் உருக்குலைந்து சேதம் அடைந்தது. அந்த பகுதியில் ஏற்கெனவே மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய மின்கம்பம்

இதற்கிடையே மஞ்சனக்கொரை அருகே விபத்தில் சேதம் அடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, அங்கு புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

ஊட்டி அருகே வைக்கோல் பாரம் ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT