தமிழக செய்திகள்

திருப்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகுந்து பெண் போலீசிடம் ஆபாச படம் காட்டிய வாலிபர் சிறையில் அடைப்பு

பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சதாம்உசேனை கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஷான்பாஷா. இவரது மகன் சதாம்உசேன் (வயது30). இவர் நேற்று காலை திருப்பத்தூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.

அங்கு ஒரு பெண் போலீஸ் பணியில் இருந்தார். அப்போது பெண் போலீஸ் அருகே சென்ற சதாம் உசேன் ஆபாச வார்த்தைகளால் பேசி தனது செல்போனில் இருந்த ஆபாச படங்களை காண்பித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கத்தி கூச்சலிட்டார். அந்த நேரத்தில் வெளியில் சென்ற சில போலீசார் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களை பார்த்தவுடன் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சதாம்உசேனை கைது செய்தனர். அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.