தமிழ்நாடு செய்திகள்

முகப்பேரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற வாலிபர் கைது: 30 கிலோ குட்கா பறிமுதல்

பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்து வருவதாக சென்னை ஜெ.ஜெ. நகர் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கத்துக்கு ரகசிய தகவல் வந்தது. முகப்பேர் சீனிவாச குமார தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு குட்கா விற்பனை செய்வதற்காக வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

மாலை மலர்

அம்பத்தூர்:

முகப்பேர் பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்து வருவதாக சென்னை ஜெ.ஜெ. நகர் இன்ஸ்பெக்டர் சூரியலிங்கத்துக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் முகப்பேர் பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது முகப்பேர் சீனிவாச குமார தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு குட்கா விற்பனை செய்வதற்காக வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 30 கிலோ குட்கா இருப்பது தெரிய வந்தது.

குட்கா விற்பனை செய்ய வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த கண்ணன்(39) என்றும் முகப்பேர் பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 30 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.