தமிழக செய்திகள்

உங்கள் விஜய் நான் வரேன், விசில் அடிக்க ரெடியா?- நெல்லையில் பாட்டு பாடி வாக்கு சேகரித்த விஜய்

தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்தவுடன் அனைவரும் நல்லா இருப்போம், நல்லாவே இருப்போம்.

நெல்லை கே.டி.சி நகரில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார்.

அப்போது, ஊங்கள் விஜய் நான் வரேன், விசில் அடிக்க ரெடியா?" என பாடல் பாடி கைகூப்பி தவெக தலைவர் விஜய் ஓட்டு கேட்டார்.

விஜய் மேலும் பேசியதாவது:-

‘நான் தன்னந்தனி ஆளு.. என்ன ஏளனமா பாரு.. மிரள போகுது ஸ்டேட்டு.. எங்க விசிலு சத்தம் கேட்டு...' ஊங்கள் விஜய் நான் வரேன், விசில் அடிக்க ரெடியா?.

சொல்லாததை செய்வோம் ஆனால், செய்வதை மட்டும்தான் சொல்வோம்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்தவுடன் அனைவரும் நல்லா இருப்போம், நல்லாவே இருப்போம்.

தவெக ஆட்சி அமைந்தவுடன் பெண்கள், இளைஞர்கள், உழைப்போர், மீனவர்கள் என எல்லாரும் நல்லா இருப்போம்.

மக்கள் பணத்தை தொட வேண்டிய அவசியம் எனக்கில்லை, இப்போது உள்ள ஆட்சியாளர்களால் இதை சொல்ல முடியுமா? இது மாற்றத்திற்கான தேர்தல் உங்கள் பணத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது, தடுக்கவும் முடியாது.

இது ஒரு தலைமுறைக்கான தேர்தல், மாற்றத்திற்கான தேர்தல் வலிகளை தாங்கிக்கொண்டு உங்களுக்காக வந்துள்ளேன்.

ஒரு அண்ணா, ஒரு காமராஜர், ஒரு எம்ஜிஆர் தானா என நீங்கள் ஏங்கியது போதும். நாங்கள் வந்துவிட்டோம்.

முத்துராமலிங்கத் தேவர், சுந்தரலிங்கனார், வ.உ.சி, அழகு முத்துகோன், ஒண்டிவீரன், கட்டபொம்மன்போல் உழைப்போம்.

ஏப்ரல் 23-ஆம் தேதி...தயவுசெய்து விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்க.. இது ஒரு விசில் புரட்சி தேர்தலா இருக்கணும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.