கொலை குறித்து லிசாரணை நடத்திய போலீசார் முத்துகிருஷ்ணனை கைது செய்தனர். போதையில் ஏற்பட்ட தகராறில் அவர் தனது அண்ணனை அடித்துக் கொன்றதாக போலீசாரிடம் கூறினார்.
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே தட்டான்குளம் நாடார் தெருவை சேர்ந்தவர் ராமர். இவருக்கு சுப்பிரமணியன்(வயது 28), முத்துகிருஷ்ணன்(25) என்ற 2 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணியன் கூலி வேலைக்கு சென்று வந்தார். நேற்று இரவு வீட்டில் சுப்பிரமணியன், முத்துகிருஷ்ணன் ஆகிய 2 பேருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த முத்துகிருஷ்ணன் அங்கு கிடந்த கம்பை எடுத்து சுப்பிரமணியனை சரமாரியாக அடித்து தாக்கினார். இதில் சுப்பிரமணியனின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார்.
இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் விரைந்து சென்று சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை குறித்து லிசாரணை நடத்திய போலீசார் முத்துகிருஷ்ணனை கைது செய்தனர். போதையில் ஏற்பட்ட தகராறில் அவர் தனது அண்ணனை அடித்துக் கொன்றதாக போலீசாரிடம் கூறினார். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.