தமிழக செய்திகள்

சிதம்பரத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை

காமாட்சியின் தந்தை பாண்டுரங்கனையும் இரும்பு பைப்பால் கொடூரமாக தாக்கிவிட்டு மகேந்திரன் தப்பி ஓடினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்ற இளம்பெண் (25) வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த காமாட்சியிடம் மகேந்திரன் என்பவர் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மகேந்திரனை காமாட்சி செருப்பால் அடித்துள்ளார்.

செருப்பால் அடித்ததோடு அதை செல்போனில் வீடியோ எடுத்த காமாட்சி, அதனை மகேந்திரனின் குடும்பத்திற்கு அனுப்பி விடுவதாக கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் காமாட்சியின் வீட்டிற்குள் புகுந்து அவரை வெட்டிக்கொலை செய்துள்ளார். மேலும், காமாட்சியின் தந்தை பாண்டுரங்கனையும் இரும்பு பைப்பால் கொடூரமாக தாக்கிவிட்டு அவர் தப்பி ஓடினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய மகேந்திரனை தேடி வருகின்றனர்.