டெங்கு காய்ச்சல் 
தமிழக செய்திகள்

உத்திரமேரூரில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி

பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.

உத்திரமேரூர் பகுதியில் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரமேரூர் அடுத்த அழிசூர் கிராமம், வடக்கு தெருவை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகன் முருகேசன்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முருகேசனை உத்திரமேரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிர் இழந்தார்.

டெங்கு காய்ச்சல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட நூக்காலம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சுமார் ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலியாகி உள்ளார்.

உத்திரமேரூர் பகுதியில் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT