தமிழக செய்திகள்

செங்குன்றத்தில் போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது

பெட்ரோல் பங்க் அருகில் வைத்து சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த சோழபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

ஆவடி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் செங்குன்றம் துணை கமிஷனர் மகேஸ்வரி உதவி கமிஷனர் விவேக் கண்ணன் ஆகியோரது அறிவுறுத்தலின் பேரில் செங்குன்றம் சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக செங்குன்றம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது பாடியநல்லூர் பெட்ரோல் பங்க் அருகில் வைத்து சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த சோழபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவரிடமிருந்து 25 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மெத்தபெட்டமைன்

இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஏற்கனவே கடந்த 14-ந்தேதி 3 பேர் கைது செய்யப்பட்டு 60 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT