கைது 
தமிழக செய்திகள்

ஏத்தாப்பூர் அருகே வாலிபர் கொலையில் உறவினர் கைது

சிகிச்சை பெற்று வந்த விமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏத்தாப்பூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வெங்கடேசை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே உள்ள தும்பல் ஏ.டி. தெருவை சேர்ந்தவர் சேட்டு. விவசாயியான இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

சேட்டுவுக்கு 2 ஏக்கர் விவசாய தோட்டம் இருக்கிறது. இதனை அவர் மகன்களுக்கு பிரித்துக்கொடுக்கவில்லை.

சொத்து தகராறு

சேட்டுவின் மகன் ராஜேந்திரன். இவரது மகனான வெங்கடேஷ் (வயது 38) நிலத்தை பிரித்துக்கொடுக்குமாறு தாத்தா சேட்டுவிடம் கேட்டு அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் சேட்டுவின் மகள் செல்லம்மாளின் மகன் விமல் (28) என்பவர் தும்பலில் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார்.

தகராறு

விமலுக்கும், வெங்கடேசுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்படும். இந்நிலையில் கடந்த 20-ந் தேதி தாத்தா சேட்டுவிடம் விமல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ் தாத்தாவிடம் பேசி சொத்துக்களை எழுதி வாங்க வந்துள்ளாயா? என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கைது

இந்த தகராறு முற்றியதில் விமலை வெங்கடேஷ் கட்டையால் தாக்கினார். இதில் தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தும்பலில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விமல் வீடு திரும்பினார். அதன்பிறகு அவரால் எழுந்திருக்க முடியவில்லை. மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு, பெத்தநாயக்கன்பாளையம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விமல் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ஏத்தாப்பூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வெங்கடேசை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT