தமிழக செய்திகள்

ஏற்காட்டில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் தடுப்பு சுவரை தாண்டி 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வாணியார் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் சுக்குநூறாக நொறுங்கியது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு துறையினர் விரைந்து காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், காரில் பயணித்த 5 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த 4 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT