தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, பிரசாரம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். அவர் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.
பிரசாரம்
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திருத்தணியில் இருந்து இன்று மாலையில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார். இதற்காக அவர் இன்று காலை திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் முருகனை தரிசனம் செய்தார்.
பின்னர் இன்று மாலை 4.30 மணியளவில் சீமான் திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். அப்போது ‘வேலோடு வாடா என் முப்பாட்டன் முருகா, உன் தமிழோடு உன் பேரன் நான் வாரேன்’ என்ற பாடலை பாடி பிரசாரம் செய்கிறார்.
அதன் பிறகு மாலை 6.30 மணியளவில் சோளிங்கர் நான்கு கால் மண்டபத்தில் வாகனத்தில் நின்றபடி பிரசாரம் செய்யும் அவர் இரவு 8.30 மணியளவில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
24-ந்தேதி
24-ந்தேதி காலை 10.30- மணிக்கு வேலூர், 11.30 மணிக்கு குடியாத்தம், மதியம் 12.30 மணி ஆம்பூரில் வாகனத்தில் சென்றபடி பிரசாரம் செய்கிறார். மாலை 6.30 மணி திருப்பத்தூ ரில் பொதுக்கூட்டத்திலும், இரவு 8.30 மணிக்கு ஊத்தங்கரை பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார்.
25-ந்தேதி
25-ந்தேதி காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரி, 11.30 மணிக்கு சூளகிரி, மாலை 4.30 மணிக்கு பாலக்கோடு, 6.30 மணிக்கு பாப்பி ரெட்டிப்பட்டியில் பிரசாரம் செய்கிறார். இரவு 8.30 மணிக்கு பென்னாகரத்தில் நடை பெறும் பொதுக் கூட் டத்தில் பேசுகிறார்.
26-ந்தேதி
26-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேட்டூரில் பிரசாரத்தை தொடங்கும் சீமான் 12 மணிக்கு ஓமலூர், மதியம் 1 மணிக்கு சேலம், மாலை 4.30 மணிக்கு வாழப்பாடியில் பிரசாரம் செய்கிறார். 6.30 மணிக்கு ஆத்தூர், இரவு 8.30 மணிக்கு கள்ளக்குறிச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.
27-ந்தேதி
27-ந்தேதி காலை 10.30 மணிக்கு சங்கராபுரத்தில் சீமான் பிரசாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து மதியம் 11.30 மணிக்கு திருக்கோவிலூர், மாலை 4.30 மணிக்கு திருவண்ணாமலை, 6.30 மணிக்கு சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இரவு 8.30 மணிக்கு வந்தவாசியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
காஞ்சீபுரம்
28-ந்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சீபுரத்தில் பிரசாரத்தை தொடங்கும் சீமான் 11.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர், மதியம் 12.30 மணிக்கு பூந்தமல்லியிலும் மாலை 6.30 மணிக்கு திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 8.30 மணிக்கு ஆவடி யில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார்.
சீமான் பிரசாரத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, கிளை உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள், அனைத்து பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.