உலக புகைப்பட நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய் புகைப்படக் கலைஞர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில், ஓடும் காலத்தின் பக்கங்களை ஒரு கணத்தில் உறையச் செய்து, வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சமூகக் கண்ணாடியாக புகைப்படங்கள் திகழ்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனித வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்நாள் நினைவாக மாற்றுவதோடு, வார்த்தைகளால் விவரிக்க இயலாத உணர்ச்சிகளையும் நிகழ்வுகளையும் கலைநயம் மிக்க புகைப்படங்கள் மூலம் உணர்த்தும் புகைப்படக் கலைஞர்களின் ஆற்றலை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும், அனைத்துப் புகைப்படக் கலைஞர்களின் கலைப் பயணமும் சிறக்க வாழ்த்துவதாகத் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.