தாராபுரத்தில் நேற்று தவெக வேட்பாளர் சத்யபாமா காதில் ரகசியமாக ஏதோ சொன்ன பிறகு அவர் அழுதபடி பேசியதாக விமர்சனம் எழுந்த நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்தார்.
இதுதொர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:-
பரப்புரையின்போது நேரம் கருதி சுருக்கமாக பேசுங்கள் என்று மட்டும்தான் சத்யபாமாவிடம் கூறினேன். அரசியல் காரணத்திற்காக ஆதாரமின்றி பேசக்கூடாது.
கடுமையான வலியில் ஒரு பெண் கண்ணீர்விட்டு பேசியதை இப்படி விமர்சிப்பதா?
ஸ்டேலின் உள்ளிட்டோர் நிகழ்வுகளில் தொகுப்பாளராக இருந்தபோதும் இதேபோல் சுருக்கமாக பேசுங்கள் என கூறியுள்ளேன்.
பொதுமக்களும் தலைவர்களும் காத்திருப்பதால் விரைவாக பேசுங்கள் என்று தான் சத்யபாமாவிடம் கூறினேன்.
யாரும் யாரையும் விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை. நல்ல தலைமையின் கீழ் சேர்ந்துள்ளனர்.
புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் கருத்து கேட்டு அதனடிப்படைியில் இறுதி முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.