சின்னபாப்பா 
தமிழக செய்திகள்

தருமபுரி அருகே இரும்பு ராடால் தாயை அடித்துக் கொலை செய்த மகன் கைது

சின்னபாப் பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியை சேர்ந்தவர் சித்தன், இவருடைய மனைவி சின்ன பாப்பா (வயது45). இவர்களது மகன் தேவராஜ் (20), கட்டிட தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி இண்டூரில் போலீஸ் தொப்பியை அணிந்து கொண்டு கையில் கத்தியுடன் சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டிய தேவராஜ், வீரமணி என்பவரை தாக்க முயன்றார்.

கைது

இது தொடர்பான புகாரின் பேரில் தேவராஜை இண்டூர் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 28-ந்தேதி இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் சிறையில் இருந்து தேவராஜ் வெளியே வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் இருந்த தேவராஜிடம், அதிக செலவு செய்து உன்னை ஜாமீனில் எடுத்துள்ளோம். எனவே இனிமேல் எந்த பிரச்சினையும் செய்யாமல் வேலைக்கு செல்லுமாறு அவரது தாயார் சின்னபாப்பா அறிவுரை கூறியுள்ளார்.

அடித்துக்கொலை

இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ் தன்னை எதிர்த்து யாரும் பேசக்கூடாது என்று கூறி தனது தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு தாயார் சின்னபாப்பாவை இரும்பு ராடால் அடித்தார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சின்ன பாப்பா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இதுபற்றி இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார்

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சின்னபாப் பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தேவராஜை நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT