சஸ்பெண்டு 
தமிழக செய்திகள்

மாயமான பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம்- துறையூர் சப்-இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்டு'

கொலை வழக்கில் சத்யா, அவரது கணவர் துரைராஜ், அவர்களது மகன் விஜய் உள்ளிட்ட 5 பேர் புலிவலம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் மகள் சுகன்யா (வயது 35). இவர் கண்ணனூர் அருகே சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் தனது தோழி சத்யா (38) என்பவரிடம் கொடுத்த கடன் தொகையை வாங்கி வருவதாக கூறி விட்டு சென்ற சுகன்யா வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக மனோகரன் துறையூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் அலைக்கழித்ததாக தெரிகிறது.

கொலை

இந்தநிலையில் சுகன்யா புலிவலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கரட்டாம்பட்டி பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இந்த கொலை வழக்கில் சத்யா, அவரது கணவர் துரைராஜ், அவர்களது மகன் விஜய் உள்ளிட்ட 5 பேர் புலிவலம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

துறையூர்

இந்த சம்பவத்தில் துறையூர் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் கவன குறைவாக செயல்பட்டது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமாரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் துறையூர் தனி பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன், அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஜீயபுரம் காவல் உட்கோட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .

SCROLL FOR NEXT