தமிழக செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

மர்ம நபர்கள் செயினுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தனலெட்சுமி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தனர்.

சேலம் குகை மாரியம்மன்கோவில் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ், இவரது மனைவி தனலெட்சுமி (52). இவர் நேற்றிரவு அந்த பகுதயில் உள்ள ஒரு செல்போன் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

நகைப்பறிப்பு

அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தனலெட்சுமி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தனலெட்சுமி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர்கள் செயினுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

விசாரனை

இதனால் கதறிய தனலெட்சுமி செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் தனலெட்சுமி கூறி அடையாளங்களை வைத்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT