தமிழக செய்திகள்

சுற்றுச்சுவர் விழுந்து ஐ.டி. பெண் ஊழியர் பலி- 2 பேரை கைது செய்தது போலீஸ்

சுற்றுச்சுவர் இடிபாடுகளில் சிக்கிய மற்றொரு ஊழியர் விக்னேஷ் குமார் காயமடைந்தார்.ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை அண்ணா சாலையில் ஆனந்த் தியேட்டர் அருகில், மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த பழமையான கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று நடைபெற்றது. ஜேசிபி எந்திரங்களின் உதவியுடன் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபடட்னர். அப்போது அந்த கட்டிடத்தின் காம்பவுண்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய ஐடி பெண் ஊழியர் பத்ம பிரியா உயிரிழந்தார். மற்றொரு ஊழியர் விக்னேஷ் குமார் காயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜேசிபி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.