சென்னை முன்னாள் மேயர் சிவராஜ் பிறந்தநாளை ஒட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது, இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்மோகன் முன்னாள் மேயர் சிவராஜூக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு தான் எங்கள் நிலைப்பாடு. எஸ்ஐஆர்-ஐ முதல் நாளில் இருந்து நாங்கள் எதிர்த்து வருகிறோம்.
எஸ்ஐஆர் என்கிற பெயரில் பல வாக்காளர்களின் பெயரை விட்டுவிட்டு சிறப்பு எஸ்ஐஆர் என்று கொண்டு வருவது ஏற்புடையது அல்ல.
எனவே, எங்களை பொறுத்தவரையில் எஸ்ஐஆர் எதிர்க்கிறோம். காங்கிரஸ் கட்சியும், தவெகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்.
எஸ்ஐஆர் மட்டும் இல்லை என்றால் தவெக இன்னும் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயித்திருக்கும். நிறைய தொகுதிகளில் வென்று இன்னும் நிறைய ராஜ்மோகன்கள் அமைச்சர்களாக வந்திருப்பார்கள்.
தமிழிசை சவுந்தரராஜன்போன்று நிறைய பெண்களும் வந்திருப்பார்கள். அதனால், எஸ் ஐஆர் என்பது பெரிய மோசடி தான்.
தமிழக அமைச்சரவையில் மாற்றும் குறித்து கேட்குறீர்கள். இணையதளத்தில் ஊகங்கள் இதுபோன்று பல வரும். எங்கள் தளபதி எங்களுக்கு பார்த்துப்பார்த்து பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் மக்கள் பணிசெய்து வருகிறோம்.
அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் விஜய்தான் இறுதி முடிவு எடுப்பார்.
அதிமுகவை நம்பி தவெக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் பரப்புரைக்காக அப்படி கூறியிருக்கிறார்.
தேர்தல் முடிவிற்கு பிறகு, திமுகவும் அதிமுகவும் ஒன்று சேரக்கூடிய நிலைக்கு போய்விட்டதால் நல்ல தலைமையை தேடி மரகத குமரவேல் உள்ளிட்டோர் அதிகவில் இருந்து விலகி இங்கு வந்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.