தமிழக செய்திகள்

முதலமைச்சரை சந்தித்து பேசணுமா?... தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

துறைகள் சார்ந்த கடிதப் போக்குவரத்திற்கு Tncmosection2026@gmail.com என்ற இ-மெயில் முகவரியை அணுக வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை:

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானதை தொடர்ந்து 10-ந்தேதி முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அன்றே முதலமைச்சருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து நேற்று, இன்று என 25 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கான இலாக்காக்களும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், முதலமைச்சரை சந்தித்து பேசுவதற்காக அனுமதி பெற office.tncm@gmail.com என்ற இ-மெயில் முகவரியை தொடர்புகொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதேபோல், கோரிக்கை மனுக்கள் அனுப்ப Cmo@tn.gov.in என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம். மேலும், துறைகள் சார்ந்த கடிதப் போக்குவரத்திற்கு Tncmosection2026@gmail.com என்ற இ-மெயில் முகவரியை அணுக வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.