தமிழக செய்திகள்

மழை வருமா? தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 13-ல் உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!- வானிலை அலர்ட்

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 13ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 13ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாகப் பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக, அடுத்தடுத்த நாட்களில் இந்த வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் கடல்பகுதியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, வரும் அக்டோபர் 13ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இது உருவாகும் பட்சத்தில் அப்பகுதிகளில் கடல் சூழலில் மாற்றம் ஏற்பட்டு, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நகர்வு மற்றும் தீவிரம் குறித்த மேலதிகத் தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதன் காரணமாகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT