தமிழக செய்திகள்

கிராமத்துக்குள் அதிகாலையில் புகுந்து மிரட்டிய காட்டு யானை

குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர்

புத்தூர்வயல்-–விமலகிரி பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை இன்று அதிகாலை புத்தூர்வயல்-–விமலகிரி சாலையில் மெதுவாக நடந்து சென்றது. இதை கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து, தங்களது வாகனங்களை பாதுகாப்பான தொலைவில் நிறுத்தினர்.

யானைகள் நடமாட்டம்

குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர். வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அப்பகுதியில் பயணிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வீடியோ

யானைகளின் அருகே செல்லவோ, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்காக தொந்தரவு செய்யவோ, வாகனங்களில் ஹாரன் எழுப்பி விரட்ட முயற்சிக்கவோ கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

கோரிக்கை

புத்தூர்வயல்-–விமலகிரி பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT