தமிழக செய்திகள்

VIDEO - பாரதிராஜா உடலை கண்டு கதறி அழுத மனைவி; கோபப்பட்ட கங்கை அமரன்; சமாதானப்படுத்திய ராதிகா

பாரதிராஜா உடலை கண்டு அவரது மனைவி, என்னை விட்டுட்டு போயீட்டீங்களே என்று கதறி அழுதார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84.

சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று பாரதிராஜா காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாரதிராஜாவின் மறைவையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள், இயக்குநர்கள் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பாரதிராஜா உடலை கண்டு அவரது மனைவி, என்னை விட்டுட்டு போயீட்டீங்களே என்று கதறி அழுதார்.

அப்போது அங்கு இருந்த இசையமைப்பாளர் கங்கை அமரன், கடைசியில யாரும் இல்லாம ஓடிப் போயிட்டீங்கல...

போனும் எடுக்கல... அவரு போன பிறகு எல்லாரும் வர்றீங்களா...

கஷ்டமா இருக்கு... பாவம் அவரு அனாதையா போயிருக்காரு... என்று கோபத்துடன் கூறினார்.

உடனே அங்கிருந்த நடிகை ராதிகா அவரிடம் எதுவும் பேச வேண்டாம் என்று கூறி அவரது தோளில் தட்டி ஆறுதல் கூறினார்.