தமிழக செய்திகள்

கூடுவாஞ்சேரியில் சோகம்: வெளியூர் சென்ற கணவர் போனில் பேசாததால் மனைவி தற்கொலை

அலுவலக பணி தொடர்பாக கடந்த 23ம் தேதி வெங்கடேஸ்வரன் பெங்களூரு சென்றார். மனைவி ரஞ்சிதா பலமுறை செல்போனில் அழைத்தபோதும், வெங்கடேஸ்வரன் எடுக்கவில்லை.

கூடுவாஞ்சேரியில், கணவர் தொலைபேசியில் பேசாததால் மனமுடைந்த ரஞ்சிதா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (40). இவரது மனைவி ரஞ்சிதா (31). இந்த தம்பதிக்கு கிருசன்யாஸ்ரீ (7), செல்வநிலா (2) என இரு மகள்கள் உள்ளனர்.

இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கூடுவாஞ்சேரி பிருந்தாவன் அவென்யூவில் குடியிருந்து வந்தனர். கணவர் வெங்கடேஸ்வரன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

விரக்தி

இந்நிலையில், அலுவலக பணி தொடர்பாக கடந்த 23ம் தேதி வெங்கடேஸ்வரன் பெங்களூரு சென்றார். மனைவி ரஞ்சிதா பலமுறை செல்போனில் அழைத்தபோதும், வெங்கடேஸ்வரன் எடுக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த ரஞ்சிதா நேற்று முன்தினம் நள்ளிரவு படுக்கை அறை மின் விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தார், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்சுடன் விரைந்து சென்று ரஞ்சிதாவின் உடலை மீட்டு பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கணவரிடம் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT