தமிழக செய்திகள்

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் சோகம்: நெல்லையில் உடற்பயிற்சி நிலைய ஊழியர் தற்கொலை

சம்பவத்தன்று இரவு அப்துல்ரசாக் தனது மனைவியைத் தொடர்புகொண்டு, குடும்பம் நடத்த வீட்டிற்குத் திரும்பி வருமாறு அழைத்துள்ளார்.

தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக எழுந்த தகராறில் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனமுடைந்த உடற்பயிற்சி நிலைய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மேலப்பாளையம் ஞானியாரப்பா தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ரசாக் (வயது 29). இவர் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் ஒரு தனியார் உடற்பயிற்சி நிலையத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். அப்துல்ரசாக், வல்லநாடு அருகேயுள்ள மியான்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆயிஷா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு 10 மாதங்களே ஆன இரட்டை குழந்தைகள் (ஒரு மகன், ஒரு மகள்) உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு, கணவருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த ஆயிஷா, தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என அப்துல்ரசாக்கிடம் கூறி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஏற்பட்ட மனக்கசப்பினால், ஆயிஷா சில நாட்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

விபரீத முடிவு

சம்பவத்தன்று இரவு அப்துல்ரசாக் தனது மனைவியைத் தொடர்புகொண்டு, குடும்பம் நடத்த வீட்டிற்குத் திரும்பி வருமாறு அழைத்துள்ளார். அதற்கு ஆயிஷா வர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அப்துல்ரசாக், அதிகாலையில் தனது அறையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் தகவல் அறிந்த மேலப்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உட கைப்பற்றினர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT