கொலை செய்யப்பட்ட நந்தினி 
தமிழக செய்திகள்

எடப்பாடி அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தொழிலாளி

நந்தினியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மணிகண்டன் அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றி கோபத்தின் உச்சிக்கு சென்ற மணிகண்டன் துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட தாவாந்தெரு சங்கோதி வட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). விசைத்தறி கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (28). இவர்களுக்கு சஞ்சனா, தாரணிகா என 2 பெண் குழந்தைகள் மற்றும் வேல்முருகன் (4) என்ற மகனும் உள்ளனர்.

நடத்தை சந்தேகம்

நந்தினியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மணிகண்டன் அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மது போதையில் மணிகண்டன் வீட்டிற்கு வந்தார். அப்போதும் நந்தினியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மணிகண்டன் தகராறு செய்தார். பின்னர் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கோபத்தின் உச்சிக்கு சென்ற மணிகண்டன் துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

போலீசில் சரண்

இதனையடுத்து மணிகண்டன் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் தனது மனைவியை கொலை செய்த தகவலை தெரிவித்து சரணடைந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த எடப்பாடி போலீசார் நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT