சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வீட்டிற்கு செல்லும் இருபுறங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வெளிநபர் யாருக்கும் விஜய் இல்லம் இருக்கக்கூடிய சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. டெலிவரி ஊழியர்கள் கூட தங்களது தகவல்களை பதிவு செய்த பிறகே அவ்வழியாக செல்ல அனுமதித்தனர்.
இந்த நிலையில், திடீரென த.வெ.க. தலைவர் விஜய் வீட்டின் முன்பு போடப்பட்டு இருந்த பாதுகாப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டது பேசும்பொருளானது. இதுதொடர்பாக த.வெ.க. இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் கூறியதாவது:-
விஜய் கேட்டுக்கொண்டதால் காவல்துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. தனக்கு எந்தவித பாதுகாப்பும் வேண்டாம் என விஜய் சொல்லிவிட்டார். தேவைப்படும்போது விஜயே காவல்துறையை அழைப்பார். விஜய் வரும்பொதேல்லாம் பொதுமக்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டனர். பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாவதால் இந்த நடவடிக்கையை விஜய் எடுத்துள்ளார் என்றார்.