போயஸ் கார்டன் 
தமிழக செய்திகள்

ஜெயலலிதா வீடு யாருக்கு கிடைக்கும்?

ஜெயலலிதா வீட்டை விற்பனை செய்வதற்கு ஓசை இல்லாமல் முயற்சிகள் நடக்கிறதாம்.ஜெயலலிதா வீட்டை வாங்க சசிகலா விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

Suresh K Jangir

சென்னை:

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை விற்பனை செய்ய தீபாவும், தீபக்கும் முடிவு செய்து இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதை தீபா, தீபக் இருவரும் உடனே மறுத்தனர். ஆனால் உண்மையில் ஜெயலலிதா வீட்டை விற்பனை செய்வதற்கு ஓசை இல்லாமல் முயற்சிகள் நடக்கிறதாம்.

தமிழகத்தில் உள்ள கோடீசுவரர்கள் சிலர் அந்த வீட்டை வாங்க முதலில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அரசியல் சர்ச்சை, சட்ட சிக்கல் போன்றவற்றுக்கு பயந்து எல்லா பணக்காரர்களும் இப்போது விலகி விட்டனர். இதனால் ஜெயலலிதா வீட்டை வாங்க சசிகலா விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

டிரஸ்ட் ஒன்றை தொடங்கி அதன் வழியாக ஜெயலலிதா வீட்டை வாங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். அந்த டிரஸ்ட்டில் சசிகலா, தீபா, தீபக் ஆகியோர் முக்கிய பொறுப்பில் இருப்பார்களாம். இந்த திட்டம் வெற்றி பெற்று நிறைவேறினால், சசிகலா மீண்டும் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறி விடுவார்.