மதுரை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்த தி.மு.க. தென்மண்டல செயலாளர் பதவி வகித்த மு.க.அழகிரியின் வலது கரம் மற்றும் நிழல் என்று அழைக்கப்பட்டவர்தான் மன்னன்.
த.வெ.க ஆட்சிக்கு எதிராக குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாக அ.தி.மு.க. நிர்வாகி மன்னனை மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்த தி.மு.க. தென்மண்டல செயலாளர் பதவி வகித்த மு.க.அழகிரியின் வலது கரம் மற்றும் நிழல் என்று அழைக் கப்பட்டவர்தான் மன்னன்.
2006-2011 காலகட்டத்தில் மதுரை மாநகராட்சி துணை மேயராக இருந்தவர். மு.க.அழகிரிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மோதல் போக்கு வந்தபின்னர் மன்னன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இருந்து ஓரம்கட்டப்பட்டனர். அதன் பிறகு சுமார் 12 ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஆர்வமின்றி இருந்தார்.
பலமுறை தன்னை தி.மு.க.வில் இணைக்கும் முயற்சியை மேற்கொண்ட மன்னனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து 2026 சட்டமன்ற தேர்தலில் தன்னை அடையாளப்படுத்த எண்ணிய அவர், கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். தற்போது த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் முன்னாள் துணை மேயரான மன்னன் சிக்கியிருப்பது மதுரை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.