தமிழக செய்திகள்

தமிழக அமைச்சரவையில் இடம்பெறப் போகும் 23 புதிய அமைச்சர்கள் யார் யார்..? வெளியானது பட்டியல்

அமைச்சர்களாக இன்று பதவியேற்க உள்ள 23 பேரில் 21 பேர் தவெக, இருவர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆவர்.

தமிழக அமைச்சர்களாக இன்று பதவி ஏற்க உள்ள 23 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ, அவிநாசி எம்எல்ஏ கமலி, குமாரபாளையம் எம்எல்ஏ விஜயலட்சுமி, காஞ்சிபுரம் எம்எல்ஏ ரஞ்சித்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

கும்பகோணம் எம்எல்ஏ வினோத், திருவாடானை எம்எல்ஏ ராஜீவ், கடலூர் எம்எல்ஏ ராஜ்குமார், அரக்கோணம் எம்எல்ஏ காந்திராஜ், ஒட்டாப்பிடாரம் எம்எல்ஏ மதன் ராஜா உள்ளிட்டோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

ராஜபாளையம் எம்எல்ஏ ஜகதேஷ்வர், கிளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார், ஈரோடு தொகுதி எம்எல்ஏ விஜய் பாலாஜி, ராசிபுரம் எம்எல்ஏ லோகேஷ் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

சேலம் எம்எல்ஏ விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ ரமேஷ், மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன், வேளச்சேரி எம்எல்ஏ குமார், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ தென்னரசு, கோவை வடக்கு எம்எல்ஏ சம்பத் குமார், அரந்தாங்கி எம்எல்ஏ முகமது ஃபர்வாஸ் உள்ளிட்டோர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர்.

தாம்பரம் தொகுதி எம்எல்ஏ சரத்குமார், ஆர்.கே நகர் எம்எல்ஏ மரிய வில்சன், கிணத்துக்கடவு எம்எல்ஏ விக்னேஷ் உள்ளிட்ட 23 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

இவர்களில், 21 பேர் தவெக எம்எல்ஏக்களும் மற்ற இருவர் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஆவர். காங்கிரஸ் எம்எல்ஏக்களான ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT