நெல் கொள்முதல்
தமிழக செய்திகள்

கொள்முதல் நிலையங்களில் குறைபாடா? புகார் அளிக்க Whatsapp எண் அறிவிப்பு

03.09.2026 முதல் 20,196 விவசாயிகளிடமிருந்து 1.17 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நடப்பு கொள்முதல் பருவம் 2026–-2027–-ற்கு மத்திய அரசால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரால் சட்டமன்ற பேரவை விதி 110-–ன் கீழ் நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156/-லிருந்து ரூ.289/-ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131/-லிருந்து ரூ.159/- ஆகவும் உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

3-ந்தேதி முதல் கொள்முதல்

அதன்படி நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027-ல் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 01.09.2026 முதல் கொள்முதல் பருவம் துவங்கப்பட்டு 03.09.2026 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் திட்டத்தினை வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து செயல்படுத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) அடங்கிய அரசாணை 15.09.2026 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027-ல் சன்னரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2750/- க்கும் பொதுரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600/-க்கும் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 03.09.2026 முதல் 20,196 விவசாயிகளிடமிருந்து 1.17 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

உழவர் உதவி மைய Whatsapp எண் 9500801465

மேலும், விவசாயிகள் எவ்வித சிரமங்களின்றி தங்களது நெல்லினை விற்பனை செய்திடவும் அவ்வாறு விற்பனை செய்திடும்போது கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைபாடுகள் பற்றியோ அல்லது பணம் வசூலிப்பதைப் பற்றியோ புகார் தெரிவிக்க

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் “உழவர் உதவி மைய Whatsapp எண். 9500801465-ல்” புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT