சமூக ஊடகங்கள்
தமிழக செய்திகள்

Western Social Media Influence நாட்டுக்கு நல்லதா? கெட்டதா?

தற்போதைய நிலைக்கு சமூக ஊடகம் இல்லாமல் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய காலக்கட்டத்தில் சமூக ஊடகம் இன்றியமையாததாகி விட்டது. பேஸ்புக், இன்ஸ்டா (ரீல்ஸ்), யூடியூப் (ஷார்ட்ஸ்) போன்ற சமூக ஊடகங்கள் மக்களை ஆக்கிரமித்துள்ளன. சிறுவர் முதல் பெரியவர் வரை இதில்தான் மூழ்கி கிடக்கின்றனர்.

சமையல் முதல் அரசியல் வரையிலான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. யூடியூப் பிரபலங்கள் இதற்காகவே மெனக்கட்டு பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பதிவிடும் வீடியோவை அதிகமானோர் பார்வையிட்டால் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் என்பதால், இதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

அதேவேளையில் சமூக ஊடகம் மூலம் இளைஞர்கள், சிறுவர்கள் தவறான வழிக்கு தடுமாறும் நிலையும் ஏற்படுகிறது. அதேபோல் அரசியல் தொடர்பான வீடியோக்களில் எது உண்மை? எது பொய்? என்பதை கண்டறிய முடியாத நிலை ஏற்படுகிறது. சமூக ஊடகம் எவ்வளவு நன்மை பயக்கிறதோ, அதே அளவிற்கு தீங்கும் விளைவிக்கிறது. அவர்கள் மனதில் தோன்றுவதை வீடியோவாக எடுத்து வெளியிடுகிறார்கள்.

தற்போதைய நிலைக்கு சமூக ஊடகம் இல்லாமல் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மேற்கத்திய சமூக ஊடக ஆதிக்கம் நம் நாட்டுக்கு நல்லதா? கெட்டதா? என மாலைமலர் மக்களின் மனநிலையை அறியும் வகையில் ஒரு vox pops-ஐ நடத்தியது. இதுதான் வீடியோ...

இதில் மக்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்..!

SCROLL FOR NEXT