தமிழக செய்திகள்

ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழா: முதலமைச்சர் விஜய் - த்ரிஷா பங்கேற்பு!

ஆந்திர மாநில காங்கிரஸின் தலைவராக உள்ளார் சர்மிளா.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார் முதலமைச்சர் விஜய்.

இந்நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷாவும் முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளாவின் மகள் அஞ்சலிக்கும், அமெரிக்காவில் வசிக்கும் சோமலா ரகுராம் ரெட்டிக்கும் நவ.25ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று திருமண வரவேற்பு விழா சென்னையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்றது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலமைச்சர் விஜய் மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின், மாமா மகன் திருமணத்திலும் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்.

SCROLL FOR NEXT