தமிழக செய்திகள்

த.வெ.க போல் ரீல்ஸ் போட்டு ஆட்சியை பிடிப்போம்- எடப்பாடி பழனிசாமி

அதிமுக நிர்வாகிகள் சமூக வலைதள செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.

எதன் மூலம் தவெக வென்றதோ அதையே பயன்படுத்தி நாமும் வெல்வோம் என சென்னை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவும் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர்," சமூகவலைத்தளங்களை நாம் சரிவர கையாளாததே நமது தோல்விக்கான காரணம். அதிமுக நிர்வாகிகள் சமூக வலைதள செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.

தவெக நமக்கு எதிரி இல்லை. திமுக தான் நமது உண்மையான எதிரி.

தவெகவில் வெற்றி நிலைக்காது, அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் நாம் தான் ஜெயிப்போம்.

வாக்குப்பதிவுக்கு முந்தைய கடைசி 3 நாட்களில் தான் அதிமுக தனது வெற்றியை பறிகொடுத்து விட்டது" என்றார்.